கள்ளக்குறிச்சி கலவரம்; நடுங்குது சார்..என் புள்ளை வரலைன்னா செத்துருவேன் - கதறும் தாய்..!
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட தன் மகன் அப்பாவி என்று கூறி தாய் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
கலவரமாக மாறிய போராட்டம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர்.
கலவரத்தின் போது பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர்.
இதில் பள்ளி முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.இந்த கலவரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கதறிய தாய்
இந்த கலவரத்தில் தொடர்புடையதாக 320க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த கொண்டு வந்த போது அங்கு வந்த அவர்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க காத்துக்கிடந்துள்ளனர்.
அப்போது கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரின் தாய் ஒருவர் என் புள்ளைய நான் பார்க்கவில்லை..நடுங்குது சார்..என் புள்ளை வரலைன்னா செத்துருவேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.