மோடி ராமநாதபுரத்தில் நின்ன நா எதிர்த்து நிப்பேன்...சவால் விடும் சீமான்
பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யும் பாஜகவும், ஆட்சியை தொடர்ந்து இரண்டு முறை இழந்த காங்கிரஸ்'ஸும் எப்படியேனும் ஜெயித்து விட வேண்டும் என மிக பெரிய அளவில் தேர்தல் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
இதில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி, இந்த தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என பரவலாக கூறப்பட்டு வருகின்றது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
எதிர்த்து போட்டியிடுவேன்
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் அக்கட்சியின் நிர்வாகியின் திருமண விழாவில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிடுவேன் என சவால் விடுத்தார். அப்போது தனக்கு ஒரு விடிவு காலம் வரும் என குறிப்பிட்ட அவர், ஒன்றுக்கும் பயன்படாத பதவி மட்டும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சிறுபான்மை மக்களுக்கு எந்த சலுகையும் கொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.