இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை..!

Ranil Wickremesinghe Sri Lanka
By Thahir May 13, 2022 12:28 AM GMT
Report

இலங்கையில் கடும் பொளாதார நெருக்கடியால் சிக்கி தவித்த வரும் நிலையில் மக்கள் போராட்டத்தினால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பொறுபேற்றுக் கொண்டார்.

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை..! | I Will Boost The Economy Pm Ranil Wickremesinghe

இவரின் தலைமையின் கீழ் 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விரைவில் முக்கியமான அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

நாடு நெருக்கடியை நோக்கி வருவதாகவும்,அதிலிருந்து மீள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார செயல் திட்டம் உள்ளதாக தெரிவித்த அவர்,பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா உடனான இலங்கையின் உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.