கூடிய சீக்கிரம் வருகிறேன்..கட்சியை சரிசெய்து விடலாம்-சசிகலா ஆடியோவால் பரபரப்பு?
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு இவரே காரணமாக திகழ்ந்தார்.
இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை நிறைவு பெற்று கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா, கர்நாடக மாநில சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்மிகப்பெரிய தாக்கத்தை எனஎதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். இதனால், அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் இன்று அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அந்த ஆடியோ பதிவுதான் தற்போது வைரலாக பரவி வருகிறது அதில், தொண்டரிடம் பேசிய சசிகலா.
நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லாம் நன்றாக உள்ளனரா? சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக கட்சியை சரி செய்துவிடலாம். அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும்.நிச்சயம் வருவேன் என்று பேசியுள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிந்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாத சசிகலா, தான் மீண்டும் வருவேன் என்று இந்த தொலைபேசி உரையாடலில் கூறியிருப்பது அவரது தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.