ரம்பம்பம் பாடலுக்கு என்னை ஆட அழைக்கவில்லை - குஷ்பு பரபரப்பு பேச்சு
கணவர் சுந்தர்.சி இயக்கும் 'காஃபி வித் காதல்' திரைப்படத்தில் ரம்பம்பம் பாடலுக்கு ஆட என்னை அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
குஷ்பு பரபரப்பு பேச்சு
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நடிகர்களாகவும் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தாஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'காஃபி வித் காதல்' இத்திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
இப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அத்துடன் யுவன் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.
இப்படத்தில் கமல், குஷ்பூ நடிப்பில் வெளியான 'மைக்கேல் மதன காமராஜ்' படத்தில் இடம்பெற்ற 'ரம்பம் ஆரம்பம்...' பாடலை இயக்குநர் சுந்தர் சி வைத்துள்ளார்.
அந்த பாடலும் யூடியூப் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் இப்பாடல் குறித்து பேசிய குஷ்பூ, "இந்த படத்தில் நான் நடித்த ரம்பம்பம் பாடலை பயன்படுத்தியுள்ளார்கள் ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை.

நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்த பாடலை படமாக்க போகிறோம்னு சுந்தர் சி கூறினார்.
முதல் நாள் சொன்னால் எப்படி வரமுடியும். நான் நடித்த பாடலில் நான் இல்லாதது வருத்தமாக இருக்கிறது என்றார். இதனைத்தொடர்ந்து மற்றவர்கள் இதுபற்றி சுந்தர். சியிடம் கேட்டபோது,
குஷ்பூ ஆடி ஏற்கனவே அந்த பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல. வேணுன்னா உங்களுக்கு குஷ்பூவ ரீல்ஸ் எடுத்து போடுறான் என்று ஜாலியாக சமாளித்தார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil