என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

admk sbvelumani itraid
By Irumporai Jul 28, 2021 04:05 PM GMT
Report

தன் வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என எதிர்பார்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என முயற்சி நடந்து வருவதாக கூறினார்.

மேலும் என் வீட்டில்தான் ரெய்டு நடக்கும் என முதலில் எதிர்பார்த்ததாகவும் நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம் என கூறினார்.

என் வீட்டுலதான்  ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல்! | I Was Expecting Raid On My House Sbvelumani

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4 ஆண்டுகள் பதவியில் நீடிக்க தங்கமணியும், நானும் முக்கிய காரணமாக இருந்ததால் என் மீது திமுகவின் கவனம் செலுத்தினார்கள், கோவை பிரச்சாரத்திலும் அதை வெளிப்படுத்தினார்கள். என் மீது எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன், அனைத்து அதிமுகவினரும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் தன்வீட்டில்தான் ரெய்டு நடக்கு என எதிர்பார்த்ததாக வேலுமணி கூறியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.