கொஞ்சம் உருப்படியான விஷயங்களில் முதலீடு செய்ய விரும்புகிறேன் : பில் கேட்ஸ்
டிஜிட்டல் நாணயங்கள் என்ற கிரிப்டோகரன்ஸி குறித்து உலகின் பல செல்வந்தர்களும் முக்கியமாக பேசி வரும் நிலையில் கிரிப்டோகரன்ஸியை எதிர்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் மற்றும் உலகின் நான்காவது பணக்காரரான பில் கேட்ஸ் கிரிப்டோகரன்ஸியை எதிர்த்துள்ளார்.
பில் கேட்ஸ் கிரிப்டோகரன்சியை பற்றி பேசுகையில் :
முதலீடு செய்தால் மதிப்பு மிக்க வெளியீடு கிடைக்கும் விஷயங்களில் நான் முதலீடு செய்ய விரும்புகிறேன். ஒரு நிறுவனத்தின் மதிப்பு அந்நிறுவனம் எவ்வாறு சிறந்த தயாரிப்புகளை உருவாக்கிறது என்பதை அடிப்படையாக கொண்டது.
ஆனால், கிரிப்டோகரன்ஸி மதிப்பு என்பது வேறு யாரோ ஒருவர் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தால் மற்ற முதலீடுகளைப் போல இதனை சமூகத்தில் சேர்த்து கொள்ள முடியாது என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
மேலும், அதிகமான முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்ஸியை நோக்கி செல்வது போல், பில் கேட்ஸ் இல்லாமல் கிரிப்டோகரன்ஸியை எதிர்த்திருக்கிறார்.
இதற்கிடையில், கிரிப்டோகரன்ஸியில் உற்சாகமாக முதலீடு செய்யும் சாதாரண முதலீட்டாளர்களுக்கு ஒரு நட்பின் ரீதியாக ” உங்களிடம் எலோன் மஸ்க்கை விட குறைவான பணம் இருந்தால், நீங்கள் ஒருவேளை கவனமாக இருக்க வேண்டும்.” என்று கூறியிருந்தது முக்கியமானது.