மறுபிறவி ஒன்று இருந்தால் கலைஞர் குடும்பத்தில் பிறக்க வேண்டும்- செல்லூர் ராஜூ!
மறுபிறவியென்று ஒன்று இருந்தால் கலைஞர் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜூ
மதுரையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசியவர்,''எடப்பாடியாயின் ஆட்சியில் சிறந்த வளர்ச்சிகளைக் கொடுத்த எங்களது தம்பி SP வேலுமணி மீது பொய் வழக்குப் போடுகிறார்கள். நாங்கள் பணங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்.இந்த ஆட்சியில் முதல்வர் ஒரு பொம்மை முதல்வராகச் செயல்படுகிறார் .
வாக்கு அளித்தவருக்குத் துரோகம் செய்யும் ஒரே கட்சி திமுக தான். நாங்கள் ஆட்சி வந்த பிறகு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.
மறுபிறவி
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ மது ஒழிப்பு மாநாடு ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும் திமுக கட்சி கூட்டணியில் பிளவு ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் லஞ்சம் கொடுத்ததாக தயாளு அம்மாவிடம் சோதனை நடத்தியபோது, அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் கூட்டணிக்குக் குறித்துப் பேசியவர்கள் தானே நீங்கள்.
நீங்கள் எங்க அம்மா மீது வழக்குத் தொடுத்தீர்கள், எங்கம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது என்று கூறினார். தொடர்ந்து மறுபிறவி இருந்தால் கலைஞர் குடும்பத்தில் மகனாகவோ, பேரனாகவோ தான் பிறக்கவேண்டும் என்று கூறியவர் இவர் தான் என்னமா வாழ்ராய்ங்க.
அம்மாவிற்கு குடும்பம் இல்லை. ஆனால் உறவுகள் இருந்தது. யாருக்கும் பதவி வழங்கவில்லை.
அது போலத் தான் எடப்பாடிக்கும் குடும்பம் உள்ளது, மகன் உள்ளார். ஆனால், யாருக்கும் பதவி வழங்கவில்லை இதுதான் அதிமுக. வருங்கால சந்ததியினரை வாழவைக்கும் ஒரே இயக்கம் அதிமுக" எனப் பேசினார்.