எனக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் தர வேண்டும் - சீமான் பரபரப்பு பேட்டி
என் வீட்டில் சோதனை செய்தால் வருமான வரித்துறையினர் தான் எனக்கு பணம் தர வேண்டியிருக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனை
இன்று காலை முதல் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை மற்றும் கரூரில் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இச்சோதனை குறித்து அறிந்து வந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகரிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வந்த காரும் தாக்கப்பட்டது.
சீமான் கேள்வி
சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் , செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவிடாமல் அதிகாரிகளை திமுகவினர் தடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியமில்லை. வருமான வரி சோதனை கண்துடைப்பு நடவடிக்கை, எவ்வளவு பறிமுதல் என சொல்லப்படுவதில்லை.
விஜய் வீட்டிலும் 2 நாட்கள் வருமான வரி சோதனை நடத்தி, பிறகு ஏதுமில்லை என்றனர். என் வீட்டில் சோதனை செய்தால் வருமான வரித்துறையினர் தான் எனக்கு பணம் தர வேண்டியிருக்கும்