நான் ஆம் ஆத்மிக்கும்.. கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார் - ராகுல் காந்தி பேச்சு!

Rahul Gandhi Delhi India Arvind Kejriwal Lok Sabha Election 2024
By Jiyath May 19, 2024 04:38 PM GMT
Report

பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி 

டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி காட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் 4-ல் ஆம் ஆத்மியும், 3-ல் காங்கிரசும் போட்டியிடுகிறது. இங்கு 6-ம் கட்டமாக வரும் மே 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நான் ஆம் ஆத்மிக்கும்.. கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார் - ராகுல் காந்தி பேச்சு! | I Vote For Aam Aadmi Kejriwal Vote For Congress

இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் "நாடாளுமன்ற தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன்.

தமிழகத்தை போதைப்பொருட்களின் வணிக மையமாக மாற்றிய திமுக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழகத்தை போதைப்பொருட்களின் வணிக மையமாக மாற்றிய திமுக அரசு - டிடிவி தினகரன் கண்டனம்!

கேள்வி கேட்பேன்

அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இரு கட்சி தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் ஆம் ஆத்மிக்கும்.. கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார் - ராகுல் காந்தி பேச்சு! | I Vote For Aam Aadmi Kejriwal Vote For Congress

ஆனால் அவர் வரமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை பிரதமர் தன் முன் வந்தால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயப் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பேன்" என்று தெரிவித்துள்ளார்.