எனது அம்மாவின் வாழ்க்கையை திருடி விட்டேன் - பேரறிவாளன் வேதனை..!

A. G. Perarivalan
1 மாதம் முன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் தாய் அற்புதம்மாள் மற்றும் பேரறிவாளன். அப்போது பேசிய பேரறிவாளன்,என் அம்மாவுடைய நீண்ட கால போராட்டம்,ஆரம்பத்தில் நிறைய அவமானங்களை சந்தித்தார்,

எனது அம்மாவின் வாழ்க்கையை திருடி விட்டேன்  - பேரறிவாளன் வேதனை..! | I Stole My Mom S Life Genius

எங்கள் பக்கம் இருந்த நீதியும் உண்மையும் தான் என் தாயை இவ்வளவு துாரம் போராட வைத்துள்ளது. என் குடும்பத்தினர் பலம் தான் அவர்களின் அன்பும் பாசமும் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிற்க வைத்துள்ளது.

எங்களுக்காக அனைவரும் துன்பப்பட்டு உழைத்து இருக்காங்க,போராடி இருக்காங்க,அரசின் ஆதரவு,மக்களின் பெரும் ஆதரவு மற்றும் 2011 சகோதரி செங்கொடியின் தியாகம்,உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பேசினார்.

எனது அம்மாவின் வாழ்க்கையை திருடி விட்டேன்  - பேரறிவாளன் வேதனை..! | I Stole My Mom S Life Genius

எனது அம்மாவின் வாழ்க்கையை திருடி விட்டதாகவும் பேரறிவாளன் வேதனை தெரிவித்துள்ளார். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பட்டியல் உள்ளது.மேலும் ஊடகம் இல்லை என்றால் என் நியாம் வெளி வந்திருக்காது.

சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன் என கூறினார் 31 ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தால் போராடி வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் குறித்த கேள்விக்கு தான் இன்னும் தீர்ப்பின் சாரம்சத்தை பார்க்கவில்லை என்று கூறினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.