‘’ எனக்குக் கிடைத்த வரவேற்பும் அன்பும் தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை ‘’ : முதலமைச்சர் ஸ்டாலின்

DMK MKStalin CMStalinInUAE
By Irumporai Mar 28, 2022 10:00 AM GMT
Report

எனக்குக் கிடைத்த வரவேற்பும் அன்பும் தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பல ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வெளிநாட்டு பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு,

திரைகடலோடித் திரவியம் தேடும் பண்பாட்டின் வழியே அமீரகம் சென்று நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், முதலீடுகளையும் பெற்றேன். எனக்குக் கிடைத்த வரவேற்பும் அன்பும் தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை  என பதிவிட்டுள்ளார்.