சினிமாவில் இருந்து விலகுகிறேன் ... உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பால் அதிர்ச்சி

Udhayanidhi Stalin DMK
By Petchi Avudaiappan May 16, 2022 09:58 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

சினிமாவில் இருந்து விரைவில் விலகவுள்ளதாக நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தயாரிப்பு மற்றும் விநியோக உரிமைகளை பெற்று வந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், மனிதன், நிமிர், நண்பேண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வுமானார். 

சினிமாவில் இருந்து விலகுகிறேன் ... உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பால் அதிர்ச்சி | I Quit In Cinema After Mamannan

விரைவில் அமைச்சராக போவதாக தகவல் பரவி வரும் நிலையில்  சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த போது தெரிவித்துள்ளார். 

வரும் மே 20 ஆம் தேதி அவர் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். 

அவர் அளித்த பேட்டியில், தந்தை ஸ்டாலினிடம் நெஞ்சுக்கு நீதி டைட்டில் குறித்து பேசும்போது நல்ல படமாக இருக்க வேண்டும் என கூறியதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் ஒப்புதல் பெற்ற பின்னரே டைட்டில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மா மன்னன் படம் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் எனவும், அதன்பிறகு  முழு நேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் உதயநிதி கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.