டேய் மண்டை எல்லாம் உடைச்சிடுவேன் ராஸ்கல்...செய்தியாளரை மிரட்டிய சீமான்..!

Naam tamilar kachchi Chennai Seeman
By Thahir Aug 14, 2022 10:35 AM GMT
Report

செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பிய செய்தியாளரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் யோவ் நீ யார் என்று ஒருமையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் 

சென்னையில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சீமான் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,

சமூக நீதி என்று நாம் பேசி கொண்டிருக்கிறோம் ஆனால் எது சமூக நீதி. சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதி வழங்குவது தான் சரியான சமூக நீதியாக இருக்கும்.

அதை பேசிக் கொண்டே எதற்கு குடிவாரி கணக்கெடுப்பு எடுக்கல. பீகாரில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அது தான் நீதி இல்லை என்றால் அது அநீதி என்று தெரிவித்தார்.

செய்தியாளரை மிரட்டிய சீமான் 

பின்னர் செய்தியாளர் ஒருவர் முற்படுத்தபட்ட வகுப்பினருக்கு பிசி மற்றும் எம்பிசி இடஒதுக்கீடு கொடுத்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

Seeman

அதற்கு பதில் அளித்த நீ தான் பெரிய வெங்காயம் ஆச்சே..நீ பிசி, எம்பிசிக்கு வா.. நான் அங்கேயே தான் இருப்பேன் நான் முற்படுத்தப்பட்ட வகுப்பாக தான் இருப்பேன் என்று பேசிக் கொண்டிருந்த போதே குறுக்கீடு செய்த செய்தியாளர் அதை பற்றி தான் நீங்கள் பேசுவதே இல்லையே சார் என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் யோவ் நீ கேக்குறது இல்ல..யார் நீ முதல்ல..காதுல்ல பஞ்ச் வச்சு படுத்துகிடந்துட்டு பேசவில்லை என்று சொல்ற..போய என்றார்.

அதற்கு செய்தியாளர் மரியாதையாக பேசுங்கள் என்றார். அதற்கு சீமான் கேக்கலைனா கேக்கவில்லை என்று சொல்லு என்றார்.

நீ என்ன மரியாதைய பேசுற நீ பேசவே இல்லை என்கிற நீ.. வா போ-ன்னு பேசக்கூடாது என செய்தியாளர் மீண்டும் பதில் அளித்தார்.

அதற்கு சீமான் செய்தியாளரை பார்த்து டேய்.. மண்டை எல்லாம் உடைச்சிடுவேன் ராஸ்கல் என மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கிருந்த கட்சியினர் மீடியா இருக்கு என்று சீமானை சமாதானப்படுத்தினர்.