சர்க்கஸ் பஃபூன் போலத்தான் இத்தனை நாட்களாக வாழ்ந்தேன் : வடிவேலு உருக்கம்

vadivelu lyca Naaisekar
By Irumporai Sep 10, 2021 02:19 PM GMT
Report

லைகா தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது அப்போது பேசிய நடிகர் வடிவேலு:

என்னுடைய பிரச்சனை சாதரணப் பிரச்சினை. என்னை வைகைப்புயல். வைகைப்புயலுன்னு சொல்லுவாங்க, ஆனால் என் வாழ்க்கையிலே சூறாவளியே வந்துடுச்சு…என மனசு சரியில்லை..ராத்திரி தூக்கமில்லை.. உடம்பு சரியில்லை.. ஒரு டாக்டருக்கு போன எடத்துலே மனசை ரிலாக்ஸ் செய்ய பக்கத்துல நடக்கற சர்க்கசில் ஒரு பபூன் பண்ற சேட்டையை பாரு.. ரிலாக்ஸ் கிடைக்குமுன்னு சொன்னாரு.

அந்த பபூனே நாந்தான்னு டாக்டர்கிட்டே மட்டுமில்லாம உங்ககிட்டேயும் பகிர்ந்துகிடறேன். சர்க்கஸ் பஃபூன் போலத்தான் இத்தனை நாட்களாக வாழ்ந்தேன். கொரோனா உலகத்தையே ஆட்டி படைத்திருக்கிறது. என்னுடைய காமெடி ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு மருந்தாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. மக்களை மீண்டும் மகிழ்வித்த பிறகே இந்த உயிர் என்னைவிட்டு போகும். முதல்வரை சந்தித்த பிறகே எனக்கு நல்லது நடந்துகொண்டு இருக்கிறது.

இனி எல்லாமே நல்லதாக நடக்கும். எனக்கு எண்டே கிடையாது. என்னைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். வரலாற்று படங்களில் நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. சந்திரபாபு, சுருளிராஜன், நாகேஷ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் தனக்கு பிடிக்கும்.

சர்க்கஸ் பஃபூன் போலத்தான் இத்தனை நாட்களாக வாழ்ந்தேன்  : வடிவேலு உருக்கம் | I Lived Like A Circus Buffoon Vadivelu Melts

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். உதயநிதி உடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன். புதிதாக நடிக்க உள்ள படத்தில் பாடல் ஒன்ற பாடப்போகிறேன். விவேக் மறைவுக்கு வடிவேலு இரங்கல். திரையுலக்கிற்கும் தனக்கும் விவேக் மறைவு பேரிழப்பு எனக் கூறினார்.