அமைச்சர் உதயநிதி மேம்படுத்துவார் என நம்புகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
திருச்சியில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.
உதயநிதி துறையை மேம்படுத்துவார்
திருச்சியிலே எது நடந்தாலும் அது பிரமாண்டமாக தான் நடக்கும், சிறிய விழவாக இருந்தாலும் அரசு விழாவாக இருந்தாலும், மாநாடு நடந்தாலும் பிரமாண்ட மாநாடாக இருக்கும்.
அப்படி நடந்தால் தான் அது திருச்சி, அப்படி நடத்துபவர் தான் கே.என்.நேரு. அரசு நிகழ்ச்சி என்று தேதி வாங்கி, அரசு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி வரும் கே.என.நேரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தொழில் தொடங்க தமிழகம் நோக்கி உலக நாடுகள் வருகின்றன. உலக நாடுகளின் முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்து வருகிறது.
அமைச்சரவைக்கு தான் அவை புதியவர் உங்களுக்கு அவர் பழைய முகம்தான். அவர் அமைச்சராக பதவியேற்ற போது பல விமர்சனங்கள் வந்தது.
அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற போது விமர்சனங்கள் வந்தது. ஆனால் தனது செயல்பாட்டின் மூலம் பதில் அளித்தார்.
இளைஞர் நலன், விளையாட்டு, சிறப்பு செயலாக்க திட்டங்கள் துறையை அவர் மேம்படுத்துவார் என நம்புகிறேன். திருச்சியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி கொண்டு வரப்படும்.
மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்களின் வாழ்கை நிலை மேம்பாடு அடைந்தது.
பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் கட்டணமில்லை, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம்.
எவ்வளவு மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் தாங்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இருக்கோம்.
நான் அமைச்சராக இருந்த போது மகளிர் சுய உதவிக்குழுவை என் கையில் வைத்திருந்தேன். இன்று தம்பி உதயநிதி வசம் உள்ளது.
தம்பி உதயநிதியை அனைவரின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த வேண்டும் அதற்கான முயற்சிகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.