ரச்சிதா'வ இன்னும் டைவர்ஸ் பண்ணல... அவுங்களுக்காக இது செய்வேன் - தினேஷ் நெகிழ்ச்சி
நடிகர் தினேஷ் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி மீண்டும் தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கிறது.
தினேஷ் ரச்சிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் வசித்து வந்தனர்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவுங்களுக்காக இத பண்ணுவேன்
இந்த செய்திகள் அடுத்து இவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தினேஷ் ரச்சித்தா குறித்து சில கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார். அது குறித்து பேட்டி ஒன்றில் தினேஷ் தற்போது பல தகவல்களை பேசி இருக்கிறார்.
அதில் தனக்கும் ரச்சிதாவிற்கும் விவாகரத்து வழக்குப் போய்க் கொண்டிருப்பதை குறிப்பிட்ட அவர், ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று கூறி அதுபோல ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டாங்க என குறிப்பிட்டு, ஒருவேளை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் கூட அந்த டைட்டில் அவருக்காக வெற்றி பெற்று கொடுக்கலாம் என கூறினார்.
ஆனால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விரும்பவில்லை என தெரிவித்த தினேஷ், தனக்கு இப்போது சீரியலில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறினார்.