எனது நெருங்கிய நண்பரை இழந்திருக்கிறேன் : ரஜினிகாந்த் வேதனை.
நடிகர் சரத்பாபு மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சரத்பாபு மறைவு
பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு இவர் கடந்த நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் இரங்கல்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில், இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன், இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth) May 22, 2023
இது ஈடுகட்ட முடியாத இழப்பு.
அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.#SarathBabu

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
