பஞ்சாப் ஆட்டத்தில் குல்தீப் யாதவ் செய்த சிறப்பான சம்பவம் - ரசிகர்கள் பாராட்டு
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் செய்த சம்பவம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் போட்டியில் நேற்று டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து பேட் செய்த டெல்லி அணியில் ப்ரித்வி ஷா 41, டேவிட் வார்னர் 60 ரன்கள் எடுக்க 10.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விருதை வென்ற பிறகு பேசிய குல்தீப் யாதவ், இதனை சக வீரரான அக்ஷர் பட்டேலுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்தார். அக்ஷர் படேல் இந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இந்த தொடரில் நான் அதிக நம்பிக்கையுடனும், பெரிய உத்வேகத்துடனும் விளையாடி வருகிறேன்.
வேலையை சரியாக செய்வதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாகவும் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.