நீட் போராட்ட சர்ச்சை: மாணவர்களை மன்னித்த பிரதமர் மோடி
நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி
நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதை விட, அவர்களை நல்வழிப்படுத்தி, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களின் முன்னேற்றமே தனது கனவு என்றும் பிரதமர் கூறினார்.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் சில இளைஞர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றவை அல்ல என குறிப்பிட்ட பிரதமர், இளமைப் பருவத்தில் தவறுகள் ஏற்படுவது இயல்பு என்றும், அவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மட்டுமே தீர்வாகாது என்றும், இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்வதே முக்கியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல் IBC Tamil
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்! IBC Tamil
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil