பெத்தவங்களே என்ன வெறுத்தாங்க...என்னிடம் அவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தது - இயக்குநர் பாலா..!

Bala
By Thahir May 23, 2022 09:06 PM GMT
Report

தன்னிடம் இருந்த கெட்ட பழக்கங்களை பார்த்து தன் பெற்றோரே தன்னை வெறுத்ததாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

நந்தா.பிதாமகன்,உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளில் வெளிகொண்டு வந்து அவர்களை மெருகேற்றி பங்கு இயக்குநர் பாலாவுக்கு உண்டு.

தமிழ் சினிமாவில் சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் போன்ற நடிகர்கள் சினிமாவில் முத்திரை பதிக்க பாலாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அண்மையில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார் பாலா.அப்போது அதில் எந்த இயக்குனரும் செய்யாத விஷயத்தை அந்த நடிகர்களை வைத்து நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள், மேலும் நடிப்பு அவ்வளவு தான் என்று இருந்த நடிகர்களுக்கு கைதூக்கி மேலே கொண்டு வந்துள்ளீர்கள் இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என சங்கீதா கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த பாலா, என்ன பெத்தவங்களே என்ன வெறுத்தாங்க, ஏனென்றால் யாருகிட்டயும் இல்லாத கெட்ட பழக்கங்கள் என்னிடம் இருந்தது.

இதனால் நான் ஒரு அனாதையாக இருப்பதாக உணர்ந்தேன். அதிலிருந்து மீண்டு வருவதற்காக கடினமாக உழைத்தேன். இதனால் யாரும் இல்லாதவங்க எப்படி இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும், அதனால்தான் எல்லாராலும் கைவிடப்பட்டவர்களை நான் கை தூக்கிவிடுகிறேன் என்று பாலா கூறியிருந்தார்.

மேலும் குடிப்பழக்கத்தை சுத்தமாக விட்டு விட்டேன், புகைப்பிடிப்பது மட்டும் உள்ளது அதையும் சிறிது நாட்களில் விட்டுவிடுவேன் என கூறினார்.