ஐஸ்வர்யாவுக்கு இப்படி ஒரு எண்ணமா? - ரஜினியின் ஆசையை நிறைவேற்றுவாரா?

Dhanush Aishwarya Rajinikanth
By Petchi Avudaiappan Apr 20, 2022 11:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் ரஜினியை வைத்து படம் இயக்குவது தொடர்பாக அவரது மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கிட்டதட்ட 18 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பின் இந்த தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் இருவரும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் நடிகர் ரஜினியின் கடைசிப்படம் அவரது இரு மகள்களின் இயக்கத்தில் உருவாகும் என்ற தகவல் பரவி வருகிறது. 

இதற்கு பதிலளித்துள்ள ஐஸ்வர்யா அப்பாவை வைத்து படம் இயக்கும் எண்ணம் எனக்கு கிடையாது. நான் அவரது ரசிகையாக இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன். அதேசமயம் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாம் என்று  சொல்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.