பெரியார் திடல் வரும் போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியார் திடல் வரும் போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்த நாள்
ஆண்டு தோறும் செப்.17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அந்த வகையில் தமிழக அரசின் சார்பின் இன்று பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
இதை தொடர்ந்து திருச்சி சிறுகனுாரில் 30 ஏக்கர் பரப்பளவில், நுாலகம், ஆய்வகங்களுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் சிறப்புரை
மேலும் இங்கு 95 அடி உயர பெரியார் சிலை நிறுவப்பட உள்ளது. இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல்.
பெரியார் திடல் எனது தாய் வீடு. பெரியார் திடல் வரும் போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன்.
தமிழ் சமூதாயத்தை அறிவார்ந்த சமூதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது.நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான் என கூறினார்.