‘எனக்கு வெக்கமா இருக்கு’ - ஆப்கான் விவகாரத்தில் கடுப்பான ஏஞ்சலினா ஜூலி
அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என்பதற்காக தான் வெட்கப்படுவதாக பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதால் அங்கு தாலிபான் தீவிரவாதிகள் உள்நாட்டு போர் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கடந்த வாரம் கைப்பற்றினர்.அங்கு வசிக்கும் பொதுமக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே சமூக ஆர்வலராகவும், பல்லுயிர் பாதுகாப்பு, அகதிகளுக்கான ஐ. நா ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ள நடிகை ஏஞ்சலினா ஜூலி தான் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என்பதற்காக வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கன் நாட்டின் உள்நாட்டு போர் குறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால் இந்த போர் இப்படியாக முற்று பெற்றிருக்க கூடாது.
நம்மை நம்பிய மக்களை கைவிட்டு இப்படி பாதியில் கைவிட்டுள்ளது பலரது தியாகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகமாகும் என அவர் கடுமையாக சாடியுள்ளார்.