‘‘நான் கோமியம் குடிக்கிறேன் அதனால் கொரோனா வரலை’’- சர்சையினை கிளப்பும் பாஜக எம்பி

covid19 india gomium bjpmp Pragya Singh
By Irumporai May 17, 2021 11:30 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா வைரசின் 2 வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க சில செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த சிலர் உடல் முழுவதும் சாணி மற்றும் கோமியத்தை பூசிக் கொண்டு குளித்த வீடியோ ஒன்று வைரலானது

.இது போன்ற செயல்களால் வேறு சில நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில், பாஜக எம்.பி பிரக்யா சிங் தான் தினமும் கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லையென கூறியிருக்கிறார்.

போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரக்யா சிங் :

தான் தினமும் கோமியம் குடிப்பதால் எந்த மருந்தையும் எடுப்பதில்லை என்றும். ஆகவே கொரோனா வரவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கோமியம் குடிப்பதால் நுரையீரல் பாதிப்புகள் சீராகும் எனவே மக்கள் நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டுமென கூறியுள்ளார்.

கொரோனாவில் இருந்து தப்பிக்க கோமியம் குடிப்பது தவறு என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், தற்போது கோமியம் குடித்தால் கொரோனா வராது என பாஜக எம்பி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.