இந்தி சினிமாவில் நடிக்க விரும்பவில்லை...சூப்பர் ஸ்டார் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி

Keerthy Suresh Mahesh Babu
By Petchi Avudaiappan May 11, 2022 05:11 AM GMT
Report

இந்தி சினிமாவில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படம் நாளை வெளியாகிறது. நாட்டில் நடைபெற்றுள்ள வங்கி மோசடிகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்காரு வாரி பாட்டா படத்தின் ரிலீஸை முன்னிட்டு மகேஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தி மொழி படங்களில் நடிக்குமாறு பல தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள்.ஆனால் அதை நான் ஏற்கவில்லை. இந்தி சினிமாவில் நடித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில் எனக்கு தெலுங்கு சினிமாவிலேயே நட்சத்திர அந்தஸ்து, புகழ், ரசிகர்கள் அன்பு கிடைத்துள்ளது.

இன்னொரு மொழி படத்தில் பணியாற்றுவது குறித்து நான் எப்போதும் யோசிக்க மாட்டேன். தெலுங்கில் இன்னும் பெரியதாக என்னென்ன படங்களை பண்ண வேண்டும் என்பதில் தான் எனது முழு கவனமும் இருக்கும். நான் தெலுங்கில் தான் நடிப்பேன். அதனை ஒட்டுமொத்த இந்தியாவுமே பார்க்க வேண்டும் என நினைப்பேன். இப்போது அது நடப்பதை பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

மேலும் தெலுங்கு படங்களில் நடிப்பதைத் தான் என்னுடைய பலமாக கருதுகிறேன் என்று மகேஷ் பாபு கூறியுள்ளார். இதனால் சினிமா திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.