பிடிச்சி போய் அரசியலில் இல்லை...ஆனாலும் - பரபரப்பாக பேசிய அண்ணாமலை
தமிழக பாஜக அரசியல் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அண்ணாமலையின் பேட்டி தற்போது கவனம் பெற்று வருகின்றது.
அண்ணாமலை பேட்டி
இன்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டது போல "ஸ்வச்சதா ஹி ஸேவா" வின் ஒரு பங்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சுத்தம் செய்யும் பணியில் ஒரு மணி நேரம் ஈடுப்பட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களும் இந்த முயற்சிக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர் என கூறி, மக்கள் ஈடுபடும் இந்த செயலில் அரசியலும் கட்சிகளும் வேண்டாம் என தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் அடுத்த முதல்வர் நீங்கள் தான் என கட்சி நிர்வாகிகள் போஸ்டர் அடித்து வருகிறார்களே என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அண்ணமாலை, இப்போது என்னை விட்டாலும் என்னுடைய தோட்டத்திற்கு ஓடி விடுவேன் என்று, அதற்காக தான் வேலையை விட்டுவிட்டு வந்ததாக கூறினார்.
பிடித்து அரசியலில் இல்லை
அப்போது மீண்டும் கட்டாயப்படுத்தி தான் அரசியலில் இருக்கின்றீர்களா? என மீண்டும் கேள்வி வர, அப்படியெல்லாம் இல்லை என்று தெரிவித்த அண்ணாமலை, அரசியலில் சில மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதால் இருப்பதாக கூறி, அரசியலில் 70 சதவீத நெகட்டிவ் 30 சதவீத பாசிட்டிவ் மட்டுமே இருப்பதாக கூறி சித்தாத்தங்களினால் வரும் சண்டைகள், தனி மனித தாக்குதல் போன்றவற்றை தாண்டி தான் நிற்கிறோம் என பேசினார்.
இருப்பினும், அரசியலில் மற்ற துறைகளை விட வேகமாக மாற்றங்கள் உருவாகும் என சுட்டிக்காட்டி, பிடித்து அரசியல் வாதி என்பதை விட மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபடுவதாக கூறினார்.