சொந்தமாக எனக்கென ஒரு வீடு இல்லை : ராகுல் காந்தி உருக்கம்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Feb 27, 2023 05:34 AM GMT
Report

காங்கிராஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று கட்சி கூட்டத்தில் பேசும் போது தனக்கென்று ஒரு வீடு இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.

ராகுல் பேச்சு : 

நேற்று நவராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேசும் போது : 1977-ல் நாங்கள் இருந்த  வீட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. அது ஒரு வினோதமான சூழ்நிலை. நான் அம்மாவிடம் போய் என்ன நடந்தது என்று கேட்டேன்.

நாம் இந்த வீட்டை விட்டுப்போகிறோம் என்று அம்மா சொன்னார். அதுவரையில் அந்த வீடு எங்கள் வீடுதான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எனவே எதற்காக நாம் வீட்டைக் காலி செய்து வெளியேறுகிறோம் என அம்மாவிடம் கேட்டேன்.

சொந்தமாக எனக்கென ஒரு வீடு இல்லை : ராகுல் காந்தி உருக்கம் | I Dont Have Won House Rahul Gandhi

அப்போதுதான் அம்மா முதல்முறையாக இது நம் வீடு அல்ல, அரசு வீடு, நாம் இப்போது இங்கிருந்து போக வேண்டும் என்றார். அடுத்து நாம் எங்கே போவோம் என அம்மாவிடம் கேட்டேன், அம்மாவோ தெரியாது என்றார். 

சொந்த வீடு இல்லை

52 வருடமாக இன்னும் எனக்கென்று ஒரு வீடு இல்லை. எங்கள் குடும்ப வீடு அலகாபாத்தில் இருக்கிறது. அதுவும் இப்போது எங்களுடையது அல்ல. நான் இப்போது துக்ளக் லேனில் 12-ம் எண் வீட்டில் வசித்தாலும், அதுவும் எனது வீடு அல்ல என உருக்கமாக கூறினார். ராகுலின் கருத்துக்கு பாஜாக செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா கூறுகையில் : ராகுல் தற்போது பொறுப்புடன் இருப்பது போல் பேசுகின்றார், ஆனால் தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜூன் கார்கே கூட ராகுலுக்கும் அவரது குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக கூறினார்