மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலால் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை - முதலமைச்சர்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Dec 08, 2022 07:51 AM GMT
Report

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலால் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

i-don-t-want-to-answer-chief-minister-m-k-stalin

நான் பதில் அளிக்க விரும்பவில்லை

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மிகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன்.

சங்கரன்கோயில் - புளியங்குடி தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். புளியங்குடியில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் வேளாண் ஒழுங்குமுறை மையம் அமைக்கப்படும்.

தென்காசி மக்களின் பிரதான கோரிக்கையான ஜம்பு நதி திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழங்கப்படாததால் திட்டம் தாமதமானது. தற்போது வனத்துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டு விட்டது.

முறையாக பணிகள் விரைவில் வழங்கும். ஜம்புநதி திட்டம் பணிகள் தொடங்கப்படும். ஆட்சிக்கு வந்து 19 மாதங்களில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 50,390 மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். உங்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் 11,490 மனுக்கள் பெறப்பட்டு 11,400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சிறுமி ஆராதனா வைத்த கோரிக்கை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும். குழந்தைகளும் என் மீது நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதம் அனுப்புகின்றன.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலால் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.