பாஜகவுக்கு Bye..Bye…அதிமுகவுக்கு தாவும் திருச்சி சூர்யா சிவா - ஐபிசி தமிழ்நாட்டிற்கு கிடைத்த பிரத்யேக தகவல்!
திருச்சி சூர்யா சிவா தான் பாஜகவில் தொடர போவதில்லை எனவும் அவர் அண்ணாமலையின் அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கட்சியில் மோதல்
தனது தந்தை மீதும் திமுக மீதும் கொண்ட அதிருப்தி காரணமாக, திருச்சி சூர்யா சிவா, தன்னை தமிழக பாஜகவில் இணைத்து கொண்டார்.
கட்சியில் இணைத்த சில காலத்திலேயே அண்ணாமலையின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்து வந்த அவர் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக பொதுவெளியில் நேரடியாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
கட்சியில் திருச்சி சூர்யா சிவாவிற்கு மாநில ஓபிசி அணியில் முக்கிய பொறுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தான், சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரண் மற்றும் சூர்யா சிவாவிற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் வெளியான டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா இருவரிடையேயான செல்போன் உரையாடல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க சூர்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
அண்ணாமலை அறிக்கை
பாஜகவில் இருந்து வெளிவந்த பிறகு எந்த கட்சியிலும் தற்போது தன்னை இணைத்து கொள்ளாமல் இருந்து வரும், திருச்சி சூர்யா சிவாவை அதிமுக தங்கள் பக்கம் இழுப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்ணாமலையின் செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவே அவரை கட்சியில் இணைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிவிக்கை
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2023
திரு.சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய… pic.twitter.com/YT6rylJhtK
இந்நிலையில், தற்போது தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சி சூர்யா சிவா கேட்டுக்கொண்டதை போல, அவர் அவருடைய பதவிகளிலேயே நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இணைய திட்டம்
இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இணைய வாய்ப்பு இல்லை என்றும் அவர் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் நவம்பர் 5ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரை நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அதிமுகவில் இணைவது உறுதி என அரசியல் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.