மன்னிப்பெல்லாம் இல்ல - நான் சொன்னதே வேற - மன்சூர் அலி கான் !!
திரிஷா - மன்சூர் அலி கான் விவகாரம் சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த நிலையில், அதனை மீண்டும் மன்சூர் அலி கான் தூண்டிவிட்டுள்ளார்.
திரிஷா - மன்சூர் அலி கான் விவகாரம்
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இதனையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மீண்டும் சர்ச்சை
அதனை தொடர்ந்து தான், மன்சூர் அலி கான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையுடன் இந்த பிரச்சனை முடிந்து விட்டதாகவே பலரும் கருதினர். ஆனால், இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மீண்டும் சர்ச்சையை மன்சூர் அலி கான் தூண்டிவிட்டுள்ளார்.
அவர் அளித்திருந்த பேட்டியில், தொலைப்பேசியில் திரிஷாவிடம் "என்னை மரணித்துவிடு" என்று தான் கூறினேன் என குறிப்பிட்டு, மன்னித்து விடு என தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது என கூறி இருக்கின்றார்.