பிரதமர் வருவது பற்றி எனக்கு தெரியாது - அண்ணாமலை பேட்டி
பிரதமர் தேவர் குரு பூஜைக்கு வருவது பற்றி எந்த தகவலும் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.'
பிரதமர் வருகை பற்றி தகவல் இல்லை
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதில் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் வருகிற தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடி வருவதாக கூறப்படும் தகவல் குறித்து கேட்டனர்.
அது குறித்து பதில் கூறிய அண்ணாமை, ‘ பிரதமர் வருகை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.’ என பதில் கூறினார்.
முன்னதாக, முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு அவர் பிறந்த ஊரான பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வரவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.