கௌதம் கார்த்திக் திருமணம்; நான் சந்தோசமா இல்ல அம்மு.! நடிகை கீர்த்தி சுரேஷ் உருக்கம்

Gautham Karthik Keerthy Suresh Manjima Mohan Tamil Cinema Marriage
By Thahir 3 மாதங்கள் முன்

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் 

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகராக வலம் வருபவர், 80'ஸ் காலகட்டங்களில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து நவரச நாயகனாக வலம் வந்த கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்.

அவரது தற்போது பத்து தல மற்றும் செல்லப்பிள்ளை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தேவராட்டம் என்ற படத்தில் நடித்தபோது அதில் ஹீரோயினாக நடித்த மஞ்சிமா மோகனுடன் காதல் வயப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவந்த நிலையில் இருவரும் அண்மையில் தங்களது காதலை உறுதிப்படுத்தினர்.

i-couldn-t-be-happier-for-you-ammu-keerthy-suresh

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவருக்கும் இன்று மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறினர்.

கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன் சமூக வலைத்தளபக்கத்தில், "நான் சந்தோசமாக இல்லை அம்மு. உன்னுடைய சிறப்பான இந்த நாளில் என்னால் உன்னோடு இருக்க முடியவில்லை என கூறி இருவருக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.