ஓபிஎஸ் உடன் இணைந்து அதிமுகவில் செயல்பட உள்ளேன் - பாக்கியராஜ்
அதிமுகவில், ஓபிஎஸ்-வுடன் இணைந்து செயல்பட உள்ளதாக இயக்குநர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜ்
நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜ்,
அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளேன். கட்சி ஒன்றாக இணைந்து செயல்பட என்னால் முடிந்ததை செய்வேன். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டிய காலம் வரும் போதும் சந்திப்பேன்.
அதிமுகவில் இணைந்து பணி
அனைவரும் ஒன்று சேர்வார்கள் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக பாடுபட்டனர். எம்ஜிஆர் கட்சியை காப்பாற்றும் வகையில், சின்ன ஒரு தொண்டனாக இவர்கள் உடன் இருந்து கட்சி பணிகளை ஆற்ற தயாராக இருக்கிறேன்.
மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து, ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கினைத்து செல்ல வேண்டும் நானும் அதையே தான் கூறி வருகிறேன்.
அதிமுகவில் இருந்தவன் தான். இனி முறையாக இணைந்து செயல்படுவேன். அனைவரும் இணைவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் என தெரிவித்துள்ளார்.