என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் : டேவிட் வார்னர் ஓபன் டாக்
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது தன்னுடைய பார்ம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட டேவிட் வார்னர் 2021ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாததன் காரணமாக அவருடைய கேப்டன் பதவியை பறித்து கேன் வில்லியம்சனிடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்படைத்தது.
அப்படி இருந்தும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு கூடதகுதி பெறாமல் முதல் ஆளாக வெளியேறியது.
மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, டேவிட் வார்னரை பாதியிலேயே அணியிலிருந்து நீக்கியது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உலக கோப்பை தொடரில் டேவிட் வார்னர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இதன் காரணமாக டேவிட் வார்னர் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் விமர்சிக்கபடுவது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய டேவிட் வார்னர், மக்கள் அனைவரும் என்னுடைய பார்மை பார்த்து சிரிக்கிறார்கள் ஆனால் அது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
தலைப்புச் செய்திகளை வழங்குவதில் நான் சிறந்தவன். இது சவால் அளிக்கக்கூடியது. 5-0 என்கிற வெற்றியை மெக்ராத் விரும்புவார். ஆஸ்திரேலிய அணிக்கு 4-0 வெற்றி கிடைக்கும் என்கிறேன்.
வானிலை காரணமாக ஒரு டெஸ்டின் முடிவை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. நான் சரியாக ரன்கள் எடுக்காதபோது கடுமையாகப் போராடிச் சிறப்பாக விளையாடுவேன்.
கடந்த 18 மாதங்களாக கரோனா காரணமாக தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. அடுத்தடுத்து தொடர்களில் முன்பு விளையாடினோம்.
அதுபோல அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாட முயல்கிறேன் என்றார்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்? Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
