‘’ எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் ‘’ - விரைவில் திரும்பி வருவேன்... நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் கொரானா தொற்றிலிருந்து நல்ல முறையில் மீண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரானா தொற்றின் 3-வது அலை தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த அலையில் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரம் கொரானாவின் உருமாற்றமான ஒமிக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது.
இதனால் மீண்டும் பல்வேலு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் கமல், வடிவேலு சமீபத்தில் சத்யராஜ், த்ரிஷா, தமன் உள்ளிட்ட பிரபலங்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அருண் விஜய் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். "உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனை செய்ததில் கொரானா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
Thanks for all the wishes and prayers!! Recovering really well... Will be back soon, stronger than before....?? Love you all...❤?#StaySafe pic.twitter.com/3mFndQC2GV
— ArunVijay (@arunvijayno1) January 8, 2022
அதனால் தற்போது வீட்டு தனிமையில் இருப்பதாகவும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அருண் விஜய் கொரானா தொற்றிலிருந்து நல்ல முறையில் மீண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நான் குணமடைய பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. முன்பை விட வலிமையாக விரைவில் திரும்பி வருவேன்,. லவ் யூ ஆல்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அருந்தவ விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை மற்றும் அறிவழகன் இயக்கத்தில் பார்டர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்