நா ஓடி ஒளிய தயாரா இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றளித்த குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
தொடர்ந்து சர்ச்சைகளும், வாக்குவாதங்களும் நிறைந்து நடந்து கொண்டிருக்கும் சட்டசபை கூட்டத்தில், இன்று எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து பழனிசாமி அணியினர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”எதிர்கட்சி தலைவர் எழுப்பிய சந்தேகத்திற்கு விளக்கம் சொல்ல வேண்டிய பொறுப்பை நான் ஏற்று கொண்டேன்.

ஓடி ஒளிய கூடாது, குற்றச்சாட்டை சொல்லிவிட்டு நீங்கள் இங்கு இருந்திருக்க வேண்டும். இது நியாயம் கிடையாது.
நான் ஓடி ஒளிய தயாரக இல்லை, பதில் சொல்லும் வரை தயாராக இருப்பேன்” என்று உரைத்து பெண் காவல் அதிகாரி பாலியல் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு FIR போடப்பட்டதாகவும், 72 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதாகவும் கூறி விளக்கமளித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் எந்த வழக்கிலாவது இது போன்ற நடவடிக்கை எடுத்தது உண்டா என கேள்வியும் எழுப்பினார்.