இரக்கமும் காட்டுவது குற்றம் என்றால் நான் குற்றவாளிதான்.. ராகுல் காந்தி ஆவேசம்!
இரக்கமும், அனுதாபமும் காட்டுவது குற்றம் என்றால் நான் குற்றவாளிதான் என்று ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மத்திய அரசை அடிக்கடி டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை டிவிட்டர் இந்தியா நிறுவனம் முடக்கியது. டிவிட்டர் இந்தியா ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை முடக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கொந்தளித்தனர்.
அதேசமயம் மத்திய அரசு மீதான தாக்குதலை ராகுல் காந்தி கைவிடவில்லை. இன்ஸ்டாகிராமில் தனது கருத்துக்களை ராகுல் காந்தி தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எங்களின் ஒரு தளத்தில் முடக்க முடியும் ஆனால் மக்களுக்கான எங்கள் குரலை அவர்கள் பூட்ட முடியாது.
இரக்கமும், அனுதாபமும் காட்டுவது குற்றம் என்றால் நான் குற்றவாளி. கற்பழிப்பு மற்றும் கொலை செய்யப்பட்டவருக்காக போராடுவது குற்றம் என்றால் நான் குற்றவாளி. கருணை, அன்பு மற்றும் நீதியின் செய்தி உலகளாவியது. 130 கோடி இந்தியர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பயப்படாதே, உண்மை மட்டுமே வெல்லும் என பதிவிட்டுள்ளார்.