மாரடைப்பால் மரணம்! வாட்ஸ் அப்பை பார்த்து அதிர்ச்சியான சொந்தங்கள்
தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவர், மாரடைப்பால் மரணத்தை எட்டியதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததால் உறவினர்கள் பதறிப்போயினர்.
தென்காசியின் திருவேங்கடம் ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாபிரபு(வயது 25), ஆட்டோ ஓட்டுனரான மகாபிரபு, வேலை நேரம் செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.
எப்போதும், காமெடி காட்சிகளை ஸ்டேட்டஸாக வைத்து வந்த மகாபிரபு, மாரடைப்பால் இறந்து விட்டதாக தனக்கு தானே போஸ்டர் அடித்து அதை வைத்துள்ளார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து மகாபிரபு-வின் நம்பருக்கு போன் செய்த போது, இறந்துவிட்டதாக கூறினால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக அப்படி வைத்ததாக தெரிவித்தாராம்.
இதை கேட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகாபிரபுவை கடுமையாக திட்டி தீர்த்துவிட்டார்களாம்.