நான் இறந்துபோகவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் - நடிகர் வேணு அரவிந்த்

Tamil Cinema Serials
By Thahir 1 வாரம் முன்

பிரபல நடிகரான வேணு அரவிந்த் தான் இறந்துபோகவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் என தெரிவத்துள்ளார்.

உடல்நலக் குறைவு 

பிரபல நடிகர் வேணு அரவிந்த் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அவருடைய தலையில் அருவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பிறகு அவர் கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

நலமாக உள்ளேன் 

இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இப்போது நான் உயிருடன் உள்ளேன்.

உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு ஏற்பட்டது பெரிய விஷயமெல்லாம் இல்லை. தலையில் சின்ன சிக்கல் ஏற்பட்டது. அதை நீக்கினார்கள். இப்போது நலமாக உள்ளேன்.

I am alive - actor Venu Aravind

பிசியோதெரபி சிகிச்சையில் உள்ளேன். ஒரு நாடகத்தில் மனசாட்சி இல்லாத வில்லனாக நடித்தேன். அதன்பிறகு அதுபோல நிறைய தொடர்கள் வந்தன.

அதனால் இதனை நான் தான் ஆரம்பித்து வைத்தேனோ என்கிற குற்ற உணர்வு கூட எனக்கு உண்டு. ஒரு நாள் காரில் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெண்மணி என்னைத் திட்டிவிட்டு மண்ணைத் துாக்கி காரில் வீசினார். இந்த சாபம் எல்லாம் என்னைப் பாதிக்குமோ என்று நான் எண்ணுவேன்.

அதனால் இனி நான் வில்லனாக நடிக்க மாட்டேன். தற்போதைய நிலையில் எனக்கு என் குடும்பத்தின் ஆதரவு நிறைய கிடைத்துள்ளது. அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பது விரைவில் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.