நான் ஒரு மோடி ஆதரவாளர் நடிகை சமந்தா ஓபன் டாக்
தான் ஒரு மோடி ஆதரவாளர் என நடிகை சமந்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறிமுகம்
கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சமந்தா.
பின்னர் தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா, யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மோடி ஆதரவாளர்
நடிகை சமந்தா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தான் மோடி ஆதரவாளர் என்று கூறினார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேட்டியில் பேசிய அவர், நான் எப்போதுமே மோடி ஜி ஆதரவாளர் என்றும் அவரது செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும்,
நாடு அவர் தலைமையில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது என்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மோடி நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்வார் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோ காட்சிகளுக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது.
Just another Reason to Love @Samanthaprabhu2 ?? pic.twitter.com/ZjdTRVlR2n
— Amit Kumar (@AMIT_GUJJU) September 1, 2022