நான் பிரதமர் மோடியின் ரசிகன் - எலான் மஸ்க் நெகிழ்ச்சி..!
நான் ஒரு இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் என்று டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரி்க்காவில் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ஜோ பைடனை சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்ததாக உள்ளது.
பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். இதனிடையே அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்தார்.
நான் ஒரு மோடியின் ரசிகன்
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின் பேசிய எலான் மஸ்க் நான் ஒரு மோடியின் ரசிகன். இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார். ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும் படி எங்களை வலியுறுத்துகிறார்.
இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி கூடிய விரைவில் இதற்காக நாங்கள் அறிவிப்போம் என நம்புகிறேன்.
நான் அடுத்த ஆண்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன்.
பிற பெரிய நாடுகளை விட இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது என்றார்.