நான் மோடியின் ரசிகன் : எலான் மஸ்க் கருத்து

Elon Musk
By Irumporai Jun 21, 2023 04:07 AM GMT
Report

இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் நான் என டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மோடி அமெரிக்க பயணம் 

4 நாள் பயணமாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்க சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாகவும் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

நான் மோடியின் ரசிகன் : எலான் மஸ்க் கருத்து | I Am A Fan Of Modi Says Elon Musk

 மோடியின் ரசிகன்

இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியினை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் பேசிய எலான் மஸ்க், நான் மோடியின் ரசிகன்.

இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார். ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி கூறியதாகவும் விரைவில் டெஸ்லா இந்தியாவுக்குள் நுழையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தான் மோடியின் ரசிகன் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.