‘’ காஷ்மீருக்கு தேவை சுதந்திரம் ’’ ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய ஹூண்டாய் நிறுவனம், காரணம் என்ன?

kashmir tweet hyundai
By Irumporai Feb 07, 2022 06:19 AM GMT
Report

தென்கொரியாவினை தலமையிடமாக கொண்டு செயல்படும் ஹூண்டாய் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் ட்வீட் ஒன்று தற்போது இந்தியாவில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

‘’ காஷ்மீருக்கு தேவை சுதந்திரம் ’’  ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கிய ஹூண்டாய்  நிறுவனம்,  காரணம் என்ன? | Hyundai Handle Posts About Kashmir Independence

அந்த ட்விட்டர் பதிவில் காஷ்மீர் சுதந்திரத்திற்கு எப்போதும் பிரார்த்திக்கிறோம், காஷ்மீர் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களை போற்றுவோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன இந்தப் பதிவு பெரும் சர்ச்சையானதால் இந்தியாவில் பலரும் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அத்துடன் ஹூண்டாய் நிறுவனத்தை இந்தியர்கள் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்தியாவிலுள்ள ஹூண்டாய் நிறுவனம் அதற்கு ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது.

அதில், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு நாங்கள் துணையாக இருந்து வருகிறோம். அதே சமயம் இந்தியாவினை நாங்கள் மதித்து வருகிறோம்.

அப்படி இருக்கும் போது எங்கள் நிறுவனத்தை பெயரை பயன்படுத்தி போடப்பட்ட ஒரு சமூக வலைதள பதிவிற்கு ஹூண்டாய் நிறுவனத்தோடு தொடர்புபடுத்துவது தவறான ஒன்றாகும் .

மேலும், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதுபோன்ற கருத்துகளை நாங்கள் ஏற்கவும் மாட்டோம்.

இந்தியா நாட்டு மற்றும் அதன் குடிமக்களின் முன்னேற்றித்திற்கு தொடர்ந்து உழைத்து கொண்டிருப்போம் எனப் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தின் சர்ச்சை பதிவுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது ஹூண்டாய் நிறுவனம் .