மனைவியோ துடிதுடிக்க தூக்கில் சடலமாக - கணவனோ வீடியோ எடுத்து ஷேர் செய்து எஸ்கேப்! கொடூர சம்பவம்
ஹைதராபாத்தில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் மனைவியை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும் மனைவியை போ போ என்று கணவன் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவியோ மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதனை தடுக்காமல் கணவரோ மனைவி துடிதுடிக்க தூக்கிலிடுவதை வீடியோ எடுத்து ரசித்துள்ளார். இதோடு இல்லாமல் அந்த வீடியோவை மனைவியின் சகோதரருக்கும் அனுப்பியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை தொடர்ந்துசம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலமாக தூக்கில் தொங்கிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாகிய கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.