தலிபான்கள் ஆக்கிரமிப்பால் விலை உயரும் ஹைதராபாத் பிரியாணி: பின்னணி என்ன?
ஆப்கானை தாலிபன்கள் கைப்பற்றியதால் ஹைதராபாத் பிரியாணியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகள் வெளியேறியதால், தாலிபான்கள் ஆட்சியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் தலிபான்கள் நாட்டை கைப்பற்றியதை உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் பாகிஸ்தான் வழியாக நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக இந்தியாவுக்கு இறக்குமதியாகும் உலர் பழங்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது.
இதனால் இந்தியாவில் ஹைதராபாத் பிரியாணியின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உலர் பழங்கள் தான் ஹைதராபாத் பிரியாணிக்கு முக்கியமான ஒன்றாகும் இந்தியாவில் கிட்டத்தட்ட 85% உலர் பழங்கள் இறக்குமதியை ஆப்கானிஸ்தானிடமிருந்தே பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.