ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்... - அதிர்ச்சி வீடியோ வைரல்..!

Viral Video Heart Attack Hyderabad
By Nandhini Feb 24, 2023 09:43 AM GMT
Report

ஐதராபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ஒருவர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்மில் சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஐதாபராத் போவன்பல்லியில் வசிக்கும் விஷால் (24) என்பவர் இன்று காலை உடற்பயிற்சி கூடத்தில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென சரிந்து கீழே விழுந்து துடிதுடித்தார்.

இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விஷாலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஷாலுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த விஷால் ஐதராபாத், ,ஆசிஃப் நகர் காவல்நிலையத்தில் கன்ஸ்டஸ்புலாக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஜிம்மில் தினமும் சென்று உடற்பயிற்சி செய்து வருவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

தற்போது இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.     

hyderabad-police-constable-dies-gym-heart-attack