5 நட்சத்திர விடுதியில் உல்லாச பார்ட்டி - பிரபல நடிகர் மகள் கைது!
ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டி நடத்திய பிரபல தெலுங்கு நடிகரின் மகள் உட்பட 142 பேர் கைது செய்யப்பட்டன.
கடந்த ஞாயிற்று கிழமை ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர விடுத்தியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நடத்தப்பட்ட உல்லாச பார்டியில் போதை மருந்துகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பார்டியில் பங்கேற்ற நடிகர் நாக பாபுவின் மகளும், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மருமகளுமான நிஹாரிகா கொனிடேலா,பிக் பாஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளருமான ராகுல்.
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரி மகளும், அம்மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி.யின் மகன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்,விடுதியின் இரண்டு உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
You May Like This