ஐபிஎல் போட்டியில் கடுப்பில் கத்திய முரளிதரன், பரபரப்பு பின்னணி என்ன?

TATA IPL IPL 2022
By Irumporai Apr 28, 2022 07:09 AM GMT
Report

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் கோபமடைந்து சத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற 40 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் மார்கோ ஜான்சன் 22 ரன்கள் எடுக்க வேண்டியிருந்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷீத் கான் மார்கோ ஜான்சனை முறியடித்து விட்டார்.

இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் அவ்விடத்திலேயே கோபமடைந்து சத்தமிட்டுள்ளார்.

முரளிதரன் டெஸ்ட் போட்டியில் பந்து வீசும் போது நடுவர் அதனை நோ பால் என அறிவித்த போதிலும், காரணம் கேட்டதற்கு பவுலிங் ஆக்சன் சரியில்லை என்று சொன்னதற்கும் மனிதன் தனது அக்மார்க் சிரிப்பையே வெளிப்படுத்தினார்.

அவ்வளவு ஏன் நிறவெறி காரணமாக ஆஸ்திரேலியாவில் முரளிதரன் மீது முட்டை வீசப்பட்டது. அப்போதெல்லாம் கோபப்படாத முரளிதரன், நேற்றைய போட்டியில் கத்தியது , தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.