குழந்தைகள் கண்முன் கணவன் செய்த கொடூர செயல் - துடிதுடித்த மனைவி
மனைவி மீது கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடத்தையில் சந்தேகம்
தெலங்கானா, ஹுஜூராபாத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் - திரிவேணி தம்பதி. 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர்.

வெங்கடேஷ், தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியும் இருக்கிறார். எனவே வறுமையால் மனைவி ஹோட்டல் மற்றும் வீடுகளுக்கு சென்று வேலை செய்து வந்துள்ளார்.
இதனால் வெங்கடேஷ், தனது மனைவி திரிவேணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் இதனை தாங்கமுடியாத நிலையில், திரிவேணி, தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கணவன் வெறிச்செயல்
ஓரிரு நாட்களில் மனைவியின் வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ், அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து திரிவேணி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார்.
வீட்டிற்குள் குழந்தைகள் கண் முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. பின் மகனை மட்டும் அழைத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். தகவலறிந்து விரைந்த போலீஸார் தலைமறைவாக இருந்த வெங்கடேஷை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.